பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஒன்றாவது சீசனைத் தொடர்ந்து, இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி முடியும் தருவாயை நெருங்கியுள்ளது.

முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனே இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்த இரண்டாவது சீசனுக்கும் மிகுந்த அளவில் வரவேற்பு இருக்கிறது.

இருந்த போதிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது, குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் ஆபாசமாக இருக்கிறது.

மேலும் அந்நிகழ்ச்சியில், மக்களின் மனதை புண்படுத்தும் வகையான வார்த்தைகள் உபயோகிக்கப்படுகிறது. இதனால் ஒரு தரப்பு மக்கள் பிகபாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இப்படி பல சர்ச்சைகளை தாண்டி பயணித்து கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. சென்னை அடுத்த பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் ’பிக்பாஸ்2’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இரவும் பகலுமாக அங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதில் அரியலூர் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் பிக்பாஸ் செட்டில் தங்கி ஏசி மெக்கானிகாக வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார்.

இந்த சோகம் ஓய்வதற்குள் பிக்பாஸ் வீட்டில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிக்பாஸில் இருந்து தினமும் ப்ரோமோக்கள் வெளியிடுவது வழக்கம். அதன்படி இன்றும் அதே போல ஒரு ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதில், அனைவரும் குரூப்பாக சேர்ந்து பலூன் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர்.

அப்போது பாலாஜியும் சினேகனும் ஒருவரையொருவர் பலூனை பிடுங்கி விளையாடும் போது, விஜி கீழே விழுகிறார்.

ரத்தம் வருவது போல் தெரியவில்லை, இருந்தாலும் அவர் மயக்கம் போட்டுவிடுகிறார். அவரை அங்கேயே படுக்க வைத்துவிடுகின்றனர். அடுத்து வரும் காட்சிகள் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது.


Post Views:
121