தி.மு.க. வின் புதிய தலை­வ­ராக மு.க. ஸ்டாலின் இன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படவுள்ளார்.
50 வரு­ட­மாக தி.மு.க தலை­வ­ராக பதவி வகித்த கரு­ணா­நிதி அண்­மையில் உயிரிழந்தார். அவ­ரது மறை­வுக்கு பின்னர் கட்­சியின் அடுத்த தலை­வரை தெரிவு செய்யும் வகையில் தி.மு.க. தலை­வ­ருக்­கான தேர்தல் நேற்­று­ முன்­தினம் நடத்­தப்­பட்­டது.
இதன்­போது , தி.மு.க. தலை­வ­ராக இருந்த கரு­ணா­நி­தியின் மகனும் கட்­சியின் செயல் தலை­வ­ரு­மான ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தி.மு.க. அமைப்புச் செய­லாளர் ஆர்.எஸ். பார­தி­யிடம் கைய­ளித்தார்.
அவரை 65 மாவட்ட செய­லா­ளர்கள் முன்­மொ­ழிந்­த­தோடு, புதுச்­சேரி நிர்­வா­கி­களும் அவ­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர்
இந்த ­நி­லையில், ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்­யா­ததால் அவர் போட்­டி­யின்றி தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.
இது­கு­றித்து அமைப்புச் செய­லாளர் ஆர்.எஸ். பாரதி, ‘தி.மு.க தலை­வ­ராக மு.க.ஸ்டாலின் போட்­டி­யின்றி தெரிவா­கிறார்.வேறு யாரும் வேட்­பு­மனு தாக்கல் செய்­யா­ததால் அவர் தலை­வ­ராகத் தெரிவு செய்யப்­ப­டு­கிறார். தி.மு.க பொதுக்­குழு கூட்­டத்தில் ஸ்டாலின் தலை­வ­ராக அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டுவார்’ என்று தெரி­வித்தார்.
அதற்­கி­ணங்க இன்று நடை­பெ­ற­வுள்ள தி.மு.க. பொதுக்­குழுக் கூட்­டத்தில் ஸ்டாலின் தலை­வ­ராக அறிவிக்கப்படவுள்ளார். தி.மு.க.வின் இரண்டாவது தலை வராக மு.க.ஸ்டாலின் தெரிவு செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.