ஐரோப்பிய நாடான சுவீடனில் நடைபெற்ற தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக இலங்கையர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் விடுமுதலை முன்னணி கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக 1986ஆம் ஆண்டு செயற்பட்ட சுனில் ஜயசூரிய என்பவரே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையில் இடதுசாரி இயக்கத்திற்காக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளார்.

1996ஆம் ஆண்டு சுவீடன் இடதுசாரி கட்சியுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

சுவீடன் தேர்தலில் பிரதான நிர்வாக பிரிவுகள் மூன்றான நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் நகர சபையை இலக்கு வைத்து 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.